செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் தரையிறங்க முடியாமல் மலேசியா, துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன
சென்னை:
மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்றன.
நிர்வாக காரணங்களால் விமானங்கள் பெங்களூரு திரும்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று காலை 7.25 மணிக்கு 152 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்தது.
ஆனால், அந்த விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதுபோல், துபாயிலிருந்து 264 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்தது.
அந்த விமானத்தையும் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.
அதேபோல் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு காலை 8.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் ஏசியா விமானம், 16 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படுவதால், இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளுக்கு, தாமதம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் முழுவதும் பெஞ்சல் புயல் கனமழை காரணமாக, விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்கவிழா: மதுரையில் முதல்வர் விஜய்
September 23, 2026, 3:06 pm
சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் எழுதிய கடிதம் வெளியானது
September 22, 2026, 3:23 pm
சென்னையில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
September 21, 2026, 10:34 pm
சூதாட்ட நோக்கம் இல்லை; தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை: டிஜிபி விளக்கம்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
