நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

20 நாட்களாக தொடரும் புலி வேட்டை; மயக்க ஊசி செலுத்தியும் புலி சிக்கவில்லை

நீலகிரி:

கூடலூர் மற்றும் மசினக்குடி பகுதிகளில் நான்கு நபர்களை கொன்ற புலியை பிடிக்கும் பணி 20 நாட்களைக் கடந்துவிட்டது. 

நேற்றிரவு மசினக்குடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் வழியில் பழுதாகி நின்ற வாகனத்தை சரிசெய்து கொண்டிருந்த நபர்களை நோக்கி புலி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.
 
இரவு 10 மணி அளவில் வனத்துறையின் மருத்துவக் குழுவினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஒரு ஊசி மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், புலி மயங்கி விழாமல் அடந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டது.  

கும்கி யானை உதவியுடன் இரவு 2 மணி வரை தேடியும் புலியை கண்டுபிடிக்க இயலாததால், தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset