நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

புதுச்சேரியில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது: பொதுமக்களுக்கு பிரட், பால், உணவு தயார் செய்ய உத்தரவு

புதுச்சேரி: 

புதுச்சேரியில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேரிடர் மீட்பு படை வரவுள்ளதாக ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'ஃபென்ஜல்' புயலாக வலுப்பெற்றது. இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை (30-ஆம் தேதி) மதியம் புயலாக கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை காலை முதல் மழை இல்லாத நிலையில், மாலை முதல் மழை பொழியத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் தரப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர். 

அங்கு வருபவர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, பிரட், பால், உணவு போன்றவை தயார் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset