செய்திகள் விளையாட்டு
மீபா தேசிய கால்பந்துப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சிலாங்கூர் மீண்டும் தற்காக்கும்: பத்துமலை
சுபாங் ஜெயா:
மீபா தேசிய கால்பந்துப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சிலாங்கூர் மாநிலம் மீண்டும் தற்காக்கும்.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை இதனை கூறினார்.
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் இளையோருக்கான கால்பந்து போவரு வரும் 6ஆம் தேதி முதல் பினாங்கில் நடைபெறவுள்ளது.
இக்கால்பந்து போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதித்து 9 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இதில் பெண்கள் அணியும் அடங்கும்.
இக்கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் சிலாங்கூர் மாநில அணிகளுக்கு சிலாங்கூர் கால்பந்து சங்கம் முழு ஆதரவை வழங்குகிறது.
இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ சுகுமாறன் தலைமையில் இன்று கொடி வழங்கி அணிகளை வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
கடந்தாண்டு இப்போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆகையால் இவ்வாண்டும் சிலாங்கூர் அணி அப் பட்டத்தை மீண்டும் தற்காக்கும் என்று பத்துமலை கூறினார்.
இதனிடையே சிலாங்கூர் கால்பந்து சங்கம் விளையாட்டாளர்கள் பினாங்கு மாநிலத்திற்கு செல்ல பேருந்து, ஜெர்சி உட்பட பல உதவிகளை செய்துள்ளது.
இவ்வேளையில் சங்கத்திற்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாக சங்கத்தின் துணைத் தலைவர் கென்னத் கண்ணா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 11:11 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என நம்புகிறேன்: மெஸ்ஸி
October 29, 2025, 11:10 am
சவூதி மன்னர் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
October 28, 2025, 8:37 am
பிபா ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது: எப்ஏஎம்
October 28, 2025, 8:28 am
லா லீகா கால்பந்து போட்டி: அல்டாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:47 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 26, 2025, 9:03 pm
மெஸ்ஸியின் கேரள வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது
October 26, 2025, 10:54 am
மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம்: கியானி இன்பான்டினோவை சந்தித்த துங்கு இஸ்மாயில் கருத்து
October 26, 2025, 10:44 am
