நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 தொற்றால் 15 பேர் உயிரிழந்தனர்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் 23 வயது நபர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்ட ஆக இளைய வயதானவர் அவர். மரணித்தவர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நேற்று மொத்தம் 15 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியானதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இது ஒரே நாளில் ஏற்பட்ட ஆக அதிகமான மரண எண்ணிக்கை.

மாண்டோரில் ஒருவர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 34 வயது நபர்.

உயிரிழந்த மற்ற 13 பேரும் 60க்கும் 89 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

8 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

ஐவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தனர்.

அவர்களுக்கு ஏற்கனவே மருத்துவப் பிரச்சனைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் 207 பேர் கிருமித்தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset