நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் புயல்: பள்ளியில் மூடப்பட்டன 

சென்னை:

தமிழகத்தில் சில இடங்களில் புயல் வீசலாம் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலின் காற்றழுத்தத் தாழ்வு வலுவடைவதால் புயல் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட சில இடங்களில் மிகக் கனத்த மழை பெய்யும் என்றும் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உண்டு என்றும் தமிழக  வானிலை ஆய்வகம் கூறியது.

அதை முன்னிட்டு சென்னை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற இடங்களில் பள்ளிகள் மூடப்படும் என்று தமிழக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடலுக்குச் செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாகக் கடலோரப் பகுதிகளுக்குத் தேசியப் பேரிடர் நிவாரணப் படையினரும் மாநில மீட்புக் குழுவினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset