செய்திகள் மலேசியா
போதைப்பொருள் குற்றச்சாட்டிலிருந்து அபிஷேக் ராஜ் விடுதலை
கோலாலம்பூர்:
கடந்த 15.11.2021 இரவு 10.00மணியளவில் பெட்டாலிங் ஜெயா போதைப்பொருள் குற்றப்பிரிவுத் துறை டாமன்சாரா டாமாயில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டது.
அப்போது அவ்வீட்டில் ஒரு பையிலிருந்து 412.3 கிராம் எடைகொண்ட கெனாபிஸ் எனும் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக வழக்கறிஞர் சிவாநந்தன் ராகவா தெரிவித்தார்.
போதைப்பொருள் இருந்த பையில் அவ்வீட்டின் உரிமையாளரான அபிஷேக் ராஜின் அடையாள அட்டை இருந்துள்ளது. அபிஷேக் ராஜை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று ஷாஆலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் போதிய ஆதாரமில்லாததால் அபிஷேக் ராஜ் விடுதலை செய்யப்பட்டார் என்று வழக்கறிஞர் கூறினார்.
நீதிபதி டாக்டர் ஹஸ்லினா ஹுஸேன் முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அபிஷேக் ராஜ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால், அவருக்கு ஆயுள்தண்டனையும் 12 பிரம்படிகளும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளதாக அவர் கூறினார்.
இவ்வழக்கை வழக்கறிஞர் சிவானந்தா ராகவன் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2024, 11:43 am