செய்திகள் மலேசியா
பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் காலமானார்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் டான்ஸ்ரீ டாக்டர் இப்ராஹிம் சாத் சுவாசக் கோளாறு காரணமாக, டாமன்சாரா சிறப்பு மருத்துவமனையில் நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் காலமானார்.
அவரின் மகன் டத்தோ ஜயரில் ஆயு இப்ராஹிம் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் கூறினார்.
சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர் குணமடைந்து வருவதாகத் தெரிந்தது.
ஆனால் நேற்று அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் வீட்டில் இருந்தபோது சுவாசிப்பதில் சிரமபப்பட்டார் என்று அவர் கூறினார்.
அவரது உடல் இன்று காலை 9 மணிக்கு புக்கிட் கியாரா இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2024, 11:43 am
சிலாங்கூர் அடுத்தாண்டு 2.35 பில்லியன் வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது: அமிருடின் ஷாரி
November 16, 2024, 11:16 am