
செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸியின் ஜெர்சி அணிந்துவர தடை விதித்த பராகுவே
அசன்சியன்:
உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தின் போது மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து வர உள்நாட்டு மக்களுக்கு பராகுவே தடை விதித்துள்ளது.
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் தென் ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பில் அர்ஜெண்டினாவும் பராகுவே அணியும் இருக்கின்றன.
கடந்த முறை உலகக் கிண்ணத்தை மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி வென்றது.
தற்போது, நடப்பு சாம்பியன் அணியுடன் பராகுவே அணி தனது சொந்த மண்ணில் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கு பராகுவே அணி தங்களது உள்நாட்டு மக்களுக்கு மெஸ்ஸி அல்லது அர்ஜெண்டினா சம்பந்தப்பட்ட எந்த சீருடையையும் அணிந்து வரக்கூடாதென கூறியுள்ளது.
மெஸ்ஸியின் பார்சிலோனா, இண்டர்மியாமி, அர்ஜெண்டினா போன்ற எந்த வகையிலும் 10 என்ற எண் பதிந்த சீருடையை அணிந்து வரக்கூடாதென பராகுவே திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் தேசிய அணிக்கு ஆதரவளிக்க இப்படி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:18 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
September 18, 2025, 10:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am