நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

“ஒரு வாக்கு பெற்ற கோவை நபருக்கு எதிர்காலத்தில் பிஜேபியில் வாய்ப்பளிக்கப்படும்”: மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை:

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டு ஒரு வாக்குப்பெற்ற கோவை நபருக்கு எதிர்காலத்தில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின.

இந்த வார்டில் மொத்தம் 1551 வாக்குகள் இருக்கும் நிலையில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதில் திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதே போல பா.ஜ.க சார்பில் அக் கட்சியின் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், கார் சின்னத்தில் போட்டியிட்டு இருந்த நிலையில் ஓரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.

இதனிடையே, ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜகச் சேர்ந்தவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக மதியம் முதலே பகிரப்பட்டு வந்தது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset