நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை:

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
 
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 

இதுகுறித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 3,506 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

3 நாட்களுக்கும் சேர்த்து சென்னையில் இருந்து 9,806 பஸ்கள், பிற ஊர்களில் இருந்து 6,734 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,540 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 5ஆம் தேதி முதல் 8ஆம்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னையில் 6 பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Live Chennai: 4 More bus terminus to be operational to cater to Diwali  needs,bus terminus,bus terminus chennai,diwali bus terminus,setc,CMBT,  Koyambedu,special buses,Koyambedu bus stand,Poonamallee bus stand,Tambaram  Sanatorium,traffic,Saidapet bus depot

தீபாவளிக்கு பஸ்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும் செயல்பட உள்ளன.

இது தவிர www.tnstc.in, www.tnstcofficialapp, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

மேலும் பஸ்களின் இயக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்படுகிறது. புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

மேலும் தமிழகம் முழுவதும் 1,500 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை பாதிக்காத வகையில் வழக்கமான கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 18004256151 ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset