செய்திகள் விளையாட்டு
உலக கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை:
“உலகளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள்; விளையாட்டு துறையின் சின்னத்தை கார், பந்தய உபகரணங்களில் பயன்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி; விளையாட்டு துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம்; கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; ‘உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு துறை (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது திராவிடமாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்’ என தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 10:16 am
40 வயதில் 40 கோல்கள்: 1,000 கோல்களை நெருங்கும் ரொனால்டோ
December 29, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் வெற்றி
December 28, 2025, 11:45 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
December 28, 2025, 11:32 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 27, 2025, 10:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 26, 2025, 9:57 am
கிறிஸ்துமஸ் மரத்திற்காக சாலா மீண்டும் கண்டனத்திற்கு இலக்கானார்
December 25, 2025, 10:57 am
செங்கடலின் நடுவில் இரு சொகுசு வீடுகளை ரொனால்டோ வாங்கினார்
December 25, 2025, 10:53 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
December 24, 2025, 7:53 am
