செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பில் இருந்து எரிக் டென் ஹாக் நீக்கம்
லண்டன்:
நிர்வாகி பொறுப்பில் இருந்து எரிக் டென் ஹாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று மென்செஸ்டர் யுனைடெட் கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. .
இதுவரை ஒன்பது ஆட்டங்களில் விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட் இங்கிலாந்து பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 14ஆவது இடத்தில் உள்ளது.
இதன் அடிப்படையில் எரிக் டென் ஹாக் தனது பொறுப்பிலிருந்து விலகி விட்டார்.
புதிய நிர்வாகி அறிவிக்கப்படும் வரை ரூட் வான் நிஸ்டெல்ரோய் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக அணிக்குப் பொறுப்பேற்பார்.
அவருக்குத் தற்போதைய பயிற்றுநர் குழு ஆதரவளிக்கும் என்று அந்தக் கால்பந்து கிளப் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற எரிக்கின் கடைசி ஆட்டத்தில், வெஸ்ட்ஹாம் யுனைடெட், மென்செஸ்டர் யுனைடெட்டை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2025, 9:18 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
November 27, 2025, 9:12 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல், ரியல்மாட்ரிட் வெற்றி
November 26, 2025, 10:04 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி தோல்வி
November 26, 2025, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா தோல்வி
November 25, 2025, 8:10 am
கால்பந்து உலகில் முதல் முறையாக வரலாறு படைத்த மெஸ்ஸி
November 25, 2025, 7:41 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
November 24, 2025, 11:48 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
November 24, 2025, 11:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
November 23, 2025, 11:01 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 23, 2025, 10:38 am
