செய்திகள் தமிழ் தொடர்புகள்
விக்கிரவாண்டியில் இன்று தவெக முதல் மாநாடு கொள்கையை அறிவிக்கும் விஜய்
விழுப்புரம்:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இதில் நடிகர் விஜய் சிறப்புரையாற்றி கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார்.
விஜயின் இந்த மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதோ வாரார்.. இதோ வாரார் என்று நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்த விவாதம் என்பது கடந்த ஜனவரி மாதம் வரை தமிழகத்தில் ஹாட் டாபிக்காக இருந்தது.
இதனை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்தார். பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் என்ட்ரியை உறுதி செய்தார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்த கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் இன்றைய மாநாட்டுக்கு 60 அடி அகலம், 170 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு அரங்கில் மொத்தம் 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மேடைக்கு முன் நுழைவாயில் வரை விஜய் உள்ளிட்ட விஐபிக்கள் மேடைக்கு வருவதற்கு ஆடியோ லான்ச்சில் வருவது போல் நடைபாதையும் தனியே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேடையில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்து சென்று ரசிகர்களை சந்திக்கும் வகையில் ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடக்கும் இடத்தில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், விஜய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளான வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழன்னை, சேர, சோழ, பாண்டியர் மன்னர்கள், விஜய் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.
இது மாநாட்டின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 4:09 pm
வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம்
December 28, 2025, 6:57 pm
தமிழகத்தில் ஜனவரி 3 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
December 28, 2025, 7:49 am
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
December 27, 2025, 8:31 am
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி உத்தரவு
December 26, 2025, 4:35 pm
அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமி
December 24, 2025, 7:28 am
