செய்திகள் விளையாட்டு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்: கொள்ளை லாபம் அடிக்கும் ஐசிசி
மும்பை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
வங்க தேசம், அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை ஆகிய எட்டு அணிகள் முதல் சுற்றில் பங்கேற்கின்றன.
இந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது.
அதன் படி, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 12 கோடி ரூபாய் வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6 கோடி கொடுக்கப்படும். அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கு தலா ரூ.3 கோடி கொடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக, டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரூ.42 கோடி ஒதுக்கப்படும் என ஐசிசி அறிவத்துள்ளது.
மேலும், 2016 போல் சூப்பர் 12 சுற்றில் வெற்றிப்பெறும் ஒவ்வொரு அணிக்கும் போனஸ் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. சூப்பர் 12 சுற்றில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவிருக்கிறது, இதில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிப்பெறும் அணிக்கு ரூ.30 லட்சம் கொடுக்கப்படும். இதற்கு மொத்தம் ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 12 சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ. 52.59 லட்சம் வழங்கப்படும், இதற்கு மொத்தம் ரூ. 4.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரவுண்ட் 1 சுற்றில் மொத்தம் 12 போட்டிகளில் நடைபெறவிருக்கிறது, ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிப்பெறும் அணிக்கு ரூ.30 லட்சம் கொடுக்கப்படும். இதற்கு மொத்தம் ரூ.3.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரவுண்ட் 1 சுற்றில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ. 30 லட்சம் வழங்கப்படும், இதற்கு மொத்தம் ரூ. 1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐசிசிக்கு விளம்பரங்கள் மூலமாகவும் சேட்டிலைட் விற்பனை மூலமும் குறைந்தபட்சம் 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும். அதாவது இந்திய ரூபாயில் 90,267,900 கோடி வருவாய் கிடைக்கும்.
லாபத்தை அள்ளிக் குவிக்கும் ஐசிசி சில கோடிகளை அணிகளுக்கு செலவு செய்கிறது. லச்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது. சுருக்கமாகச்சொன்னால் இந்த உலகக்கோப்பை மூலம் கொள்ளை லாபம் அடிக்கிறது ஐசிசி எனும் தனியார் நிறுவனம்.
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:05 pm
அனைத்துலக K கார் பந்தயத்தில் Antera Motor Sports அணி களமிறங்கவுள்ளது
November 5, 2025, 12:33 pm
பிபாவின் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் இல்லை; அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது: துங்கு இஸ்மாயில்
November 5, 2025, 8:59 am
சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச் வெற்றி
November 5, 2025, 8:54 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல், அர்செனல் வெற்றி
November 4, 2025, 7:34 am
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி
November 4, 2025, 7:30 am
மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்தது
November 3, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 3, 2025, 11:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 3, 2025, 9:01 am
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி
November 2, 2025, 9:34 am
