நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பெங்களூர், ராமநாதபுரம் நகரங்களுக்கு சென்னையில் இருந்து பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் 

சென்னை: 

பெங்களூர், ராமநாதபுரம் நகரங்களுக்கு சென்னையில் இருந்து பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (06209) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.55 மணிக்கு சிறப்பு ரயில் (06210) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.50 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூருவை அடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தாம்பரம் - ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் - ராமநாதபுரத்துக்கு நவ.2-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை வாரம் மும்முறை (வியாழன், சனி மற்றும் திங்கள்) இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06103) 13 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மறுமார்க்கமாக, ராமநாதபுரம் - தாம்பரத்துக்கு நவ.3 முதல் டிச.1-ம் தேதி வரை வாரம் மும்முறை (வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்) இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06104) 13 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset