செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஒன்றிய அரசின் 33% வரி காரணமாக தமிழகத்தில் தீபாவளி இனிப்புப் பலகார விலைகள் கடும் உயர்வு
கோவை:
ஒன்றிய அரசு விதித்துள்ள கடும் வரிகளால் தமிழகத்தில் சமையல் எண்ணெய், முந்திரி, நெய், கடலை மாவு ஆகிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. தீபாவளி இனிப்பு, பலகார வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது.
குறிப்பாக முந்திரி பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் காஜு கத்தலி உள்ளிட்ட இனிப்புகளின் விலை கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
குறிப்பாக கச்சா பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி 5.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல பாமாயில், சோயாபீன், எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரி 13.75 சதவீதத்தில் இருந்து 33.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையிலும், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி உயர்வு காரணமாகவும், சமையல் எண்ணெய் விலை யாரும் எதிர்பாராத வகையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது.
சமையல் தேவைக்கும், இனிப்பு, பலகாரங்கள் தயாரிப்புக்கு முக்கியமாக உள்ள சமையல் எண்ணெய் விலை உயர்வு ஏழை, நடுத்தர குடும்பங்களில் அத்தியாவசியப் பொருட்களின் மாத செலவை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா கூறும்போது, “சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் சமையல் எண்ணெய் விலை ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.
பாமாயில் லிட்டர் ரூ.120 வரை விற்பனையாகி வந்தது. இப்போது ரூ.30 அதிகரித்து ரூ.150 ஆக விலை உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.210 ஆக விலை அதிகரித்துள்ளது. தேங்காய் எண்ணெய் ரூ.170-ல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 6:06 pm
திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண் நடுவானில் உயிரிழப்பு
November 20, 2024, 12:50 pm
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை
November 18, 2024, 5:25 pm
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்
November 17, 2024, 4:31 pm
ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரி இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்
November 16, 2024, 11:55 am
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரையிலிருந்து விரைவு பேருந்துகள் சேவை தொடக்கம்
November 13, 2024, 7:43 am
கவிக்கோ நினைவலைகள்
November 12, 2024, 2:04 pm
இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை: பலத்த மழைக்கு வாய்ப்பு
November 11, 2024, 4:20 pm
பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை; இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு: ஜெயக்குமார்
November 10, 2024, 2:50 pm
தெலுங்கர்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவு
November 10, 2024, 9:13 am