நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை:

தமிழகத்தில் அக்.31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதால், வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தீபாவளியையொட்டி சொந்த ஊர்  சென்று திரும்புவோருக்கு ஏதுவாக தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அடுத்த நாள் நவம்பர் 1ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.

நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை விடப்படுவதால், அதனை ஈடு செய்ய நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset