நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் கனமழை: 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன

சென்னை: 

சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழைநீர் தேக்கம் காரணமாக, பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: 

மழைநீர் பெருக்கம் காரணமாக, பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

மரங்கள் அகற்றம்:

சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், இதுவரை போக்குவரத்து மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதுவரை மழையால் முறிந்து விழுந்த மரங்கள் அனைத்தையும் மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றி வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset