நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டி: பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி வெற்றி

சபாக் பெர்ணம்:

மலேசியாவின் தலைமை கணக்காளர் கிண்ண கால்பந்துப் போட்டி பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணியினர் வெற்றி பெற்றனர்.

மலேசியாவின் தலைமை கணக்காளர் கிண்ண கால்பந்து சபாக் பெர்ணம் அரங்கில் நடைபெற்றது.

10, 12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்காக இப்போட்டி நடத்தப்பட்டது.

இதில் 12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில்  பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் அணியினர் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட அணியினர் பெனால்டி கோல் கணக்கில் கேபிஎம்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணியினருக்கு 1000 ரிங்கிட்டும் வெற்றி கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்திய மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சங்கம் தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இப்பயிற்சி தான் இம்மாணவர்கள் இன்று வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ளனர்.

இவ்வணி தொடர்ந்து அதிகமாக போட்டிகளை பங்கேற்று வெற்றி பெறும்.

இது தான் எனது இலக்கு என்று சங்கத்தின் தலைவர் பத்துமலை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset