செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸி உலக சாதனை: இந்தாண்டை வெற்றியுடன் முடித்த அர்ஜெண்டினா
அயர்ஸ் பியூனஸ்:
அர்ஜெண்டினா அணியினர் இந்தாண்டை வெற்றியுடன் முடித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அர்ஜெண்டினா அணியும் பெரு அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 55ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி உதவியினால் லௌடாரோ மார்டினீஸ் கோல் அடித்து அசத்தினார்.
இந்த கோல் அடிக்க மெஸ்ஸி உதவியதன் மூலம் அமெரிக்காவின் தேசிய அணியின் ஜாம்பவான் லண்டோன் டோனோவன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் (58) அடிக்க உதவியதை சமநிலை செய்துள்ளார்.
மேலும் இந்த கோல் மூலம் மார்டினீஸ் தனது அர்ஜெண்டினா அணிக்காக 35ஆவது கோலை பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் ஜாம்பவான் தியாகோ மாரடோனாவுடன் சமநிலை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2026ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் மெஸ்ஸி விளையாடுவாரா எனத் தெரியவில்லை.
ஆனால் இந்தாண்டுக்கான கடைசி போட்டியை மெஸ்ஸி விளையாடினார். இதை மறக்க முடியாத ஆண்டு என அவர் கூறினார்.
மேலும் கடைசியாக அர்ஜெண்டினா விளையாடிய 70 போட்டிகளில் 65 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 8:35 am
13 ஆண்டுக்கு பின் இந்தியா வருகைதரும் மெஸ்ஸி: கேரளா கால்பந்து போட்டியில் களமிறங்குகிறார்
November 20, 2024, 4:21 pm
டேவிஸ் கோப்பை: கண்ணீருடன் விடைபெற்ற நடால்
November 20, 2024, 8:42 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: ஜெர்மனி சமநிலை
November 19, 2024, 8:19 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா - இந்தியா சமநிலை
November 19, 2024, 8:16 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் சமநிலை
November 18, 2024, 9:57 pm
உலக கேரம் சான்பியன்ஷிப்: தமிழக வீராங்கனை காசிமா 3 தங்கம் வென்றார்
November 18, 2024, 5:27 pm
திடலில் மயங்கி விழுந்த ஹங்கேரி துணை பயிற்றுநர் நலமாக உள்ளார்
November 18, 2024, 9:04 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
November 18, 2024, 9:00 am