நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் பிரின்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை அலெக்ஜான்ட்ரோ கார்னான்கோ, ராஸ்மஸ் ஹோஜ்லன்ட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் அஸ்டன்வில்லா, பிரிக்டோன், லெய்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset