நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நிங்போ பொது டென்னிஸ்: அரையிறுதிக்கு முச்சோவா, படோசா முன்னேற்றம்

பெய்ஜிங்:

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரேசில் வீராங்கனை ஹதாத் மையா உடன் மோதினார்.

இதில் படோசா 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset