செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருவண்ணாமலை மண்சரிவு: இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் நிலை என்ன?
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை, மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் உருக்குலைந்த நிலையில், அவற்றில் வசித்த 7 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்தது.
கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது.
இதேபோல், திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரி நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், திருவண்ணாமலை மாநகராட்சியைச் சுற்றியுள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்ததால் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.
இதற்கிடையே, திருவண்ணாமலையின் மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன.
இந்தநிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையால், மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில், இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.
இந்த வீடுகளில் வசித்துவந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என அச்சம் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை வீடுகள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால், அவர்களால் மீட்புப்பணியை தொடர முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
ஆனால், இரவு நேரம் என்பதால், மீட்பு பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 9:15 pm
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு
December 2, 2024, 4:08 pm
ஏற்காடு செல்லும் பாதையில் மண் சரிவு: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
December 2, 2024, 3:48 pm
அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை
December 2, 2024, 9:44 am
மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 பல்லிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
November 30, 2024, 9:25 am
புயல் எச்சரிக்கை: பாதுகாப்பாக வீடுகளில் இருங்கள்
November 29, 2024, 10:40 pm
சென்னையில் உள்ள பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: மாநகராட்சி வேண்டுகோள்
November 28, 2024, 10:32 pm