நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 பல்லிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: 

மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட 55 பல்லிகள், திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது. 

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்துக்கு மலேசியா தலைநகர் கோலாம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது.  

விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அலுவலர்கள் பயணிகளின் உடமைகளை வழக்கம் போல சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் பயணித்த ஆண் பயணியின் உடமைகளை சோதித்தபோது, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டு வரப்பட்ட உயிருடன் கூடிய 55 பல்லிகளை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக நுண்ணிறிவுப்பிரிவு அலுவலர்கள் மாவட்ட வன அலவலர் கிருத்திகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்ட வனத்துறை அவற்றை ஆய்வு செய்துவிட்டு, அந்த பல்லிகள் இந்திய நாட்டைச் சேர்ந்தவை அல்ல. 

மேலும் வெளிநாடுகளிலிருந்து விலங்கினங்களை கொண்டு வரும் உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை  எனக்கூறி சுங்கத்துறைக்கு அவற்றை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப கடிதம் வழங்கி உள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset