செய்திகள் விளையாட்டு
கடந்தகாலப் பெருமைகளில் குளிர்காயக்கூடாது: சவூதி ஆட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை
ரியாத்:
2026 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிக்கு சவூதி அரேபியா தகுதி பெற வேண்டும் என்ற இலக்குடன் அக் குழுவின் பயிற்றுவிப்பாளரான இத்தாலியின் ரோபர்டோ மன்சினி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
அக்டோபர் 10ஆம் தேதியன்று ஜப்பானிடம் சவூதி அரேபியா 2-0 எனும் கோல் கணக்கில் சுருண்டது.
இந்த ஆட்டம் சவூதியின் ஜெட்டா நகரில் நடைபெற்றது.
இதனால் ஏமாற்றம் அடைந்த மன்சினி, கடந்தகாலப் பெருமைகளைப் பற்றி நினைத்துக்கொண்டு அவற்றில் குளிர்காயக்கூடாது என்று தமது ஆட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெற்றியைக் குவிக்காவிடில் வடஅமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உலகக் கிண்ணப் போட்டிக்கு சவூதி தகுதி பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 15ஆம் தேதியன்று பஹ்ரைனுடன் சவூதி மோதுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 12:18 pm
இந்தியாவின் பூப்பந்து வீராங்கனை பி.வி.சிந்துவுக்குத் திருமணம்
December 3, 2024, 11:41 am
கால்பந்து போட்டியில் மோதல்: நெரிசலில் சிக்கி 56 ரசிகர்கள் மரணம்
December 3, 2024, 11:40 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி தோல்வி
December 2, 2024, 8:53 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல் மாட்ரிட் வெற்றி
December 2, 2024, 8:51 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
December 1, 2024, 2:18 pm
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா தோல்வி
December 1, 2024, 2:05 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
November 29, 2024, 10:15 am