நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல்: துபாய், மலேசியாவில் இருந்து கடத்தப்பட்டன

சென்னை: 

துபாய், மலேசியா நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.4.2 கோடி மதிப்புடைய 6 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரகசிய தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். 

அப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மலேசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்களை நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் அவர்களுடைய உடமைகளை சோதனை செய்தனர்.

அதன்படி, இரண்டு பயண பெட்டிகள் 3 கிலோ எடை உடைய தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.1 கோடி ஆகும்.  

அதோடு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, துபாயிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் மற்றொரு பயணிகள் விமானத்தில் மேலும் 2 பயணிகள் இதே போல் தங்கம் கடத்தி வருவதாக தகவல் தெரிவித்தனர். 

துபாயிலிருந்து சென்னை வரும் தனியார் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சந்தேகத்துக்கு இடமான அந்த இரண்டு பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்களின் சூட்கேஸ்களை திறந்து பார்த்து சோதித்த போது, அவர்களின் பயன பெட்டிகளில் ரகசிய அறைகள் இருந்தது தெரிய வந்தது. 

அதை உடைத்து பார்த்தபோது, 3 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 2.1 கோடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset