நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஏதோ பேருக்கு வந்த கட்சி இல்லன்னு நிரூபிப்போம்: மாநாடு குறித்து விஜய் அதிரடி அறிக்கை

சென்னை:

ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நிரூபிப்போம் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்  விஜய் கூறி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். 

இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழக மக்களுக்காக அரசியலில் குதித்து இருக்கின்றார்.

தமிழக வெற்றிக் கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். 

இதற்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருகின்றார் விஜய்.

இந்நிலையில் விஜய் எதற்கு அரசியலுக்கு வந்தோம் என்று தெரியாமல் கட்சி தொடங்கி உலக சாதனை செய்துவிட்டார் என்று பலரும் குறை கூறி வரும் நிலையில் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். 

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கை பிரகடன மாநாடு.

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், இது நம்முடைய கொள்கை திருவிழா. இந்த சமயத்தில் ஒன்றை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். 

பொறுப்பான மனிதனை தான் குடும்பம் மதிக்கும் பொறுப்பான குடிமகனை தான் நாடு மதிக்கும். 

அதிலும் முன்னுதாரணமாக திகழும் மனிதனை தான் மக்கள் போற்றுவார்கள். நம் கழகத்தினர் இந்த மூன்றாகவும் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு அரசியல் என்றால் என்ன தெரியுமா? மாநாடு என்றால் என்ன தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட முடியுமா? என பல கேள்விகள் நம்மை நோக்கி வீசுகின்றனர். 

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போது அவர்களுக்கு புரியும். 

ஏதோ தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற பெயரில் அரசியலுக்கு வந்த கட்சி, அன்று வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றிக்கான போகின்ற கட்சி என்பதை நம்மை எடை போடுபவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் இயக்கமாக இருந்த நாம் மக்களோடு மக்களாக நின்று களமாடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகும் இயக்கமாக மாறி உள்ளோம். 

அரசியல் களப்பணிகள் வேறு, அதற்கான நடைமுறைகள் வேறு, ஆம் அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல விவேகமாக இருப்பது அதைவிட முக்கியம் என்று விஜய் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset