செய்திகள் தமிழ் தொடர்புகள்
மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, பிறரை சன்னியாசி ஆக்குவது ஏன்?: ஜக்கி வாசுதேவுக்கு நீதிமன்றம் கேள்வி
சென்னை:
தனது மகளுக்கு திருமணம் செய்துவிட்டு பிற பெண்களை சன்னியாசியாக மாற்றுவது ஏன் என்று கோவை ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியது.
மேலும், அவரது ஆசிரமத்தில் சோதனை நடத்தவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, கோவை ஈஷா யோக மையத்தில் காவல்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் புதன்கிழமை தடை பெற்றது.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஈஷா யோகா மையத்தில் யோகா கற்க சென்ற தனது மகள்கள் லதா,கீதா ஆகியோர் அங்கேயே தங்கிவிட்டார்கள்.
தனி அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகிறார்கள். ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான், மகள்களுடன் பேச முடியும் என்று கூறுகிறார்கள். இதனால் நானும், என் மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் மகள்களை மீட்டு தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
எனினும், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெற்றோர் தங்களை அவமானப்படுத்துவதாக இரு மகள்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ஜக்கி வாசுதேவை குறிப்பிட்டு 'நீங்கள் முற்றும் துறந்த ஞானிகள் ஆகிவிட்டீர்களே. பிறகு இதை ஏன் பொருட்படுத்த வேண்டும்' என்றனர்.
மேலும், ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, மற்றவர்களை சன்னியாசி ஆக்குவது ஏன்?
சில சந்தேகங்கள் உள்ளன. எனவே ஈஷா யோக மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று ஆய்வு செய்து, அக்டோபர் 4ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, கோவை ஈஷா மையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்த சோதனைக்கு எதிராக மன்றத்தில் ஈஷா மையம் தாக்கல் செய்து கொண்டு போய் விசாரித்த தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட இரு பெண்களையும் காணொளி வாயிலாக விசாரித்தார். அப்போது இது பெண்களும் தங்கள் சமூகத்துடன் ஈஷா யோகா மையத்தில் இருப்பதாக தெரிவித்தனர். இதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் சோதனையிடும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 9:15 pm
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு
December 2, 2024, 4:08 pm
ஏற்காடு செல்லும் பாதையில் மண் சரிவு: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
December 2, 2024, 3:48 pm
அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை
December 2, 2024, 12:28 pm
திருவண்ணாமலை மண்சரிவு: இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் நிலை என்ன?
December 2, 2024, 9:44 am
மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 பல்லிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
November 30, 2024, 9:25 am
புயல் எச்சரிக்கை: பாதுகாப்பாக வீடுகளில் இருங்கள்
November 29, 2024, 10:40 pm
சென்னையில் உள்ள பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: மாநகராட்சி வேண்டுகோள்
November 28, 2024, 10:32 pm