நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் 4-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: 

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்றுமுதல் அக்.4-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

குமரிக்கடல் மற்றும் தமிழகப் பகுதிகளின் மேல் ஒருவளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6-ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு,கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், நாளை மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

3-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 4-ஆம் தேதி மேற்கூறிய மாவட்டங்களோடு செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset