
செய்திகள் தமிழ் தொடர்புகள்
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை: மு.க.ஸ்டாலின் அரசுக்கு எதிராக எடப்பாடி கண்டனம்
சென்னை:
மத்திய அரசு உத்தேசித்துள்ள வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காத முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இந்த வக்ஃபு வாரிய சட்டத்திருத்ததில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தது. இச்சட்டம் அறிமுகப்படுத்திய போதே பல எதிர்ப்புகள் உருவானதைத் தொடர்ந்து இந்த சட்டம் தொடர்ந்து விளக்கவுரை நாளை செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது
வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தில் இருக்கும் சாதக பாதகங்கள் பற்றி இஸ்லாமியர்கள் தான் முழுமையாக உணர்ந்து சொல்ல முடியும் என்பதோடு இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு இன்று வரை அதற்கு ஆதரவான ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிகிறது
எஸ்.டி.பி.ஐ, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஜமாஅத் இஸ்லாமிய ஹிந்த், தேசிய முஸ்லிம் லீக், வெல்பர் பார்ட்டி ஆஃப் இந்தியா, மனிதநேய ஜனநாயக கட்சி போன்ற இஸ்லாமிய அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் அழைப்புகள் விடுக்கப்படவில்லை.
திரு ஸ்டாலினின் திமுக அரசு, இஸ்லாமியர்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகமாக இது பார்க்கப்படுகிறது.
இந்த அரசின் ஓர வஞ்சனை செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துகொள்வதாக எடப்பாடி கே. பழனிச்சாமி சொன்னார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm