செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் இன்று முதல் அக்.1-ஆம்தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை:
தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்.28) முதல் அக்.1-ஆம்தேதி வரை சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அக்.2, 3-ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (செப். 28) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 3, 2026, 6:59 am
சென்னையில் சிங்கப்பூர் நூல்கள் வெளியீடு
January 2, 2026, 5:23 pm
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை
January 2, 2026, 3:14 pm
வைகோவுக்கு இப்போது 82 வயதா? அல்லது 28 வயதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
January 1, 2026, 11:26 am
தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.249 கோடி
January 1, 2026, 11:13 am
கொட்டும் மழையில் சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம்
December 31, 2025, 4:09 pm
வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம்
December 28, 2025, 6:57 pm
