நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் 

சென்னை:

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை சனிக்கிழமை (செப்.28) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:  

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் வெள்ளிக்கிழமை (செப்.27), இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

சனிக்கிழமை (செப்.28) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 2 நாள்கள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset