நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை - துபாய் எமிரேட்ஸ் விமானத்தில் திடீர் புகை: பயணிகள் கடும் அதிர்ச்சி

சென்னை:

சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் திடீரென வந்த புகையால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

எமிரேட்ஸ் விமானம் நேற்று  இரவு 9.30 மணிக்கு, பயணிகள் 280 பேருடன் சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்பட வேண்டும். 

அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறிய நிலையில், கிளம்புவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்னதாக, விமானத்திலிருந்து புகை வர ஆரம்பித்தது.

விமான ஊழியர்களும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக விமான இயக்கம் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் புறப்படும்; இல்லையெனில் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset