செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை:
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 27, 28 தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரில் 7 செமீ, வேப்பூரில் 5 செமீ, விழுப்புரம் மாவட்டம் அரசூர், திருவெண்ணெய்நல்லூர், கடலூர் மாவட்டம் மீ.மாத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 9:15 pm
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு
December 2, 2024, 4:08 pm
ஏற்காடு செல்லும் பாதையில் மண் சரிவு: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
December 2, 2024, 3:48 pm
அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை
December 2, 2024, 12:28 pm
திருவண்ணாமலை மண்சரிவு: இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் நிலை என்ன?
December 2, 2024, 9:44 am
மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 பல்லிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
November 30, 2024, 9:25 am
புயல் எச்சரிக்கை: பாதுகாப்பாக வீடுகளில் இருங்கள்
November 29, 2024, 10:40 pm
சென்னையில் உள்ள பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: மாநகராட்சி வேண்டுகோள்
November 28, 2024, 10:32 pm