செய்திகள் தமிழ் தொடர்புகள்
வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கிடக்கின்ற முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்புகளில் உரிய சமூகநீதி வழங்கப்பட்டு இருக்கிறதா?: திமுக அரசிடம் ஜவாஹிருல்லா கேள்வி
சென்னை:
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு ஏறத்தாழ 36,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கி இளையோர்க்கு வழங்கப்பட்டிருப்பதை முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதை மனமாரப் பாராட்டி மகிழ்கிறோம்.
அதே நேரத்தில் எல்லாத் துறைகளிலும் வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கிடக்கின்ற முஸ்லிம்களுக்கு இந்த வேலை வாய்ப்புகளில் உரிய சமூகநீதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்னும் பல்லாயிரம் வேலை வாய்ப்புகளை இந்த அரசு உருவாக்கி இளைஞர்களுக்கு வழங்கி, அவர்களின் வாழ்வை உயர்த்த வேண்டும் என்றும் விழைகிறோம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட, பின்னடைந்த நிலைமையை கருத்தில் கொண்டு முறையான ஆய்வுகளுக்குப் பிறகு 3.5 விழுக்காடு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீட்டுக்குச் சட்டம் இயற்றி அறிவித்தார்.
ஆனால் இதுவரை முஸ்லிம்களுக்கான அந்த 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்கின்ற ஐயம் எங்கள் மனதில் இருந்து வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்திலும் வெள்ளை அறிக்கை கேட்டு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.
இப்பொழுது புதிய வேலை வாய்ப்புகள் பற்றிய செய்தியை பார்த்து மகிழ்கின்ற அதே நேரத்தில் இந்த வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய சமூக நீதி வழங்கப்பட்டிருக்கிறதா் என்று அறிய விரும்புகின்றோம்.
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்த சமூக நீதி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் புறக்கணிக்கப்பட்டிருந்த சமூக நீதியை வழங்கிட வேண்டும்.
முஸ்லிம்களால் நிரப்பப் படவேண்டிய பணியிடங்களை
பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து அவற்றில் முஸ்லிம்களை நிரப்பிடவும் வழி வகுக்க வேண்டும், என்றும் தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
கடந்த 13 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கான 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு பின்பற்றப்பட்டுள்ளது குறித்த தரவுகளை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம்.
இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக அரசிடம் வினா எழுப்பி உள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 3, 2024, 9:15 pm
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு
December 2, 2024, 4:08 pm
ஏற்காடு செல்லும் பாதையில் மண் சரிவு: போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
December 2, 2024, 3:48 pm
அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை
December 2, 2024, 12:28 pm
திருவண்ணாமலை மண்சரிவு: இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் நிலை என்ன?
December 2, 2024, 9:44 am
மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 பல்லிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
November 30, 2024, 9:25 am
புயல் எச்சரிக்கை: பாதுகாப்பாக வீடுகளில் இருங்கள்
November 29, 2024, 10:40 pm
சென்னையில் உள்ள பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: மாநகராட்சி வேண்டுகோள்
November 28, 2024, 10:32 pm