நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வக்பு வாரியத் தலைவர் பதவியிலிருந்து அப்துர் ரஹ்மான் வெளியேறியதன் பின்னணி என்ன? நவாஸ் கனி அவசரமாக NOC தேவை இல்லை என்று அறிவித்ததேன்?: வெல்ஃபேர் கட்சி கேள்வி 

சென்னை:

வக்பு வாரியத் தலைவர் பதவியிலிருந்து அப்துர் ரஹ்மான் வெளியேறியதன் பின்னணி என்ன? நவாஸ் கனி அவசரமாக என் ஓ சி தேவை இல்லை என்று அறிவிப்பதன் நோக்கம் என்ன?: வெல்ஃபேர் கட்சியின் துணைத் தலைவர் முஹம்மது கவுஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவில் உள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள வக்பு சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கோடு ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முனைவதை நாம் எல்லோரும் அறிவோம். அதற்கு எதிராக அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ஒருமித்து போராடி வருகிறார்கள். 

இந்நிலையில் தமிழ்நாட்டில் வக்ஃப் வாரிய தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், தமிழ்நாட்டில் வக்பு நிலங்களாக கருதப்படும் அனைத்து சொத்துக்களுக்கும் பூஜ்ஜிய மதிப்பு என அறிவித்தார். 

அதைத்தொடர்ந்து திருச்செந்தூரை கிராமத்தில் உள்ள 350 ஏக்கருக்கும் மேற்பட்ட வக்பு நிலங்களுக்கும் மேற்படி அறிவிப்பு வெளியானது. இதை எதிர்த்து இந்துத்துவ இயக்கங்கள் மேற்படி வக்பு நிலத்தில் உள்ள கோயில்களை முஸ்லிம்கள் அபகரிக்க முனைவதாக பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். 

வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொழுது சட்ட அமைச்சர் கிரன் ரிஜு இதைக் குறித்து பேசியதை அனைவரும் அறிவோம். 

மேற்படி பிரச்சனையை தொடர்ந்து அரசின் அழுத்தத்தின் காரணமாக அப்துல் ரஹ்மான் திருச்செந்துரை கிராமத்தில் உள்ள வக்பு நிலங்களுக்கு மாவட்ட ஆட்சியரே தடையில்லா சான்று அளிக்கலாம் என கூறினார். மேலும் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். 

அதைத்தொடர்ந்து முஸ்லிம் லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நவாஸ் கனி தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் புதிய சேர்மனாக பதவி ஏற்றுள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள நவாஸ் கனி அளித்த பேட்டியின்போது பிரச்னை உள்ள நிலங்களின் விற்பனைக்கு வக்ஃப் வாரியத்தின் என்ஓசி தடையில்லா சான்று தேவை இல்லை என முடிவெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். 

மேற்படி முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துக்கள் பலதும் பறிபோகும் நிலை ஏற்படும். ஏற்கனவே ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் சொத்துக்கள் மட்டுமின்றி புதிதாகவும் அரசியல் கட்சி தலைவர்களாலும் பல சாதி மத ஆதிக்கம் நிறைந்தவர்களாலும் வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படும் சூழல் ஏற்படும். இதன் காரணமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு பலனளிக்க வேண்டிய வக்பு சொத்துக்கள் தொடர்ந்து பறிபோகும் நிலையே உருவாகும். 

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் சமூகம் நிலை கொண்டுள்ள நிலையில் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் வக்பு நிறுத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பது போல மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

இதற்கு எதிராக வெல்ஃபேர் கட்சி தனியாகவும் முஸ்லிம் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளுடன் இணைந்தும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுக்கும். 

மேலும் திமுக அரசின் அழுத்தத்திற்கு பணிந்து  நவாஸ் கனி எடுக்கப் போகும் மேற்படி ஆபத்தான நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு நிர்வாகம் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்திடம் மனு அளித்துள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset