நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் வடகிந்தா தமிழ்ப்பள்ளிகள் கால்பந்து போட்டி: கிளேபாங் தமிழ்ப்பள்ளியும் புந்தோங் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடின

ஈப்போ:  

முதல் முறையாக தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரின் சுழற்கிண்ண கால்பந்து போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இங்குள்ள ஈப்போ பாடாங்கில் சிறப்பாக நடந்தேறியது. இப்போட்டியில் வடகிந்தாவை சேர்ந்த 14 தமிழ்ப்பள்ளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

இப் போட்டியில் 16 குழுக்கள் ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவில் 6 குழுக்களும் பங்கேற்றன. இப்போட்டியின் இறுதியாட்டத்தில்  ஆண்கள் பிரிவில் கிளேபாங் " பி" தமிழ்ப்பள்ளி 3-1 கோல்கணக்கில் செட்டியார் தமிழ்ப்பள்ளியை வென்று சாம்பியனானது. மூன்றாவது இடத்தை புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளி வென்றது.

May be an image of 2 people, people playing football, people playing American football, grass and text

இதுபோலவே பெண்கள் பிரிவில் 6 குழுக்கள் பங்கேற்றன. அவற்றில் இறுதியாட்டத்தில் புந்தோங் மெத்தடிஸ்ட் தமிழ்ப்பள்ளி 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் கிளேபாங் தமிழ்ப்பள்ளியை வென்று முதல் இடத்தை வென்றனர். மூன்றாவது இடத்தை செட்டியார் தமிழ்ப்பள்ளி வென்றது.

இப்போட்டியில் வெற்றிப்பெற்ற குழுவினருக்கு சுழற்கிண்ணம், பதக்கங்கள், ரொக்க பணம் மற்றும் இந்த போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைத்து குழுவினருக்கும் ஒரு புதிய பந்து பரிசாக வழங்கப்பட்டது.

இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற குழுவினருக்கு பேராக் போலீஸ்படை தலைவர் டத்தோஸ்ரீ பஹாலாவன் அஜிசி மாட் அரிஸ், பேராக் நகைக்கடை சங்க தலைவரும், பேராக் இந்திய கால்பந்து சங்கத்  தலைவருமான டத்தோ அமாலுடின் இஸ்மாயில், தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு அதிகாரி ஆர். சுரேஸ் குமார், இதர பிரமுகர்கள் வெற்றிப் பெற்ற குழுவினருக்கு பரிசுகள் எடுத்து வழங்கினார்கள்.

இந்த போட்டியை பேராக் மாநில சமூகநல இயக்கத்தினர் ஏற்பாடு செய்தனர். அடுத்தாண்டு மாநில அளவில் இப்போட்டி நடத்தப்படும் என்று ஏற்பாட்டுக்குழு தலைவர் ஸ்டான்லி நெல்சன் கூறினார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset