நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய மதபோதகர் மகாவிஷ்ணுவின் சர்ச்சை வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம்

சென்னை: 

அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பி மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகா விஷ்ணுவின் வீடியோ, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார்.

மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்துத் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset