நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தின் 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்கிறது

சென்னை: 

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது.  

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. 

நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றியமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியது. 

ஏப்ரல் மாதத்துக்கான சுங்கக்கட்டணம் ஜூனில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது அடுத்த (செப்டம்பர்) மாதம் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.

சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, ஓமலூர் உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset