நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: "என்னை திருமணம் செய்து கொள்வாயா?” ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற சகவீராங்கனைக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வீரர்

பாரிஸ்:

இந்த ஒலிம்பிக் திருவிழாவில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தங்கம் வென்ற சீன பேட்மிண்டன் வீராங்கனை ஒருவரிடம், அவரது காதலர் திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் யாகியாங். பேட்மிண்டன் வீராங்கனையான இவர், நேற்று நடைபெற்ற போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவிற்கு தங்கப் பதக்கத்தைத் தேடித் தந்தார். 

அந்தப் பதக்கத்துடன் மேடையில் தோன்றியவரிடம் அவரது காதலரான லியு யுசென், அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். 

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹுவாங் யாகியாங் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனார். 

மேலும், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மோதிரத்தை எடுத்து மண்டியிட்டப்படியே ஹுவாங்கிடம், திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். 

இதனால், ஹுவாங் மேலும் ஆச்சர்யமடைந்தார். பின்னர் அவரும் ஆனந்தக் கண்ணீருடன் ’ஆம்’ எனப் பதிலளித்தார். 

இதைக் கேட்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அது பல டெசிபல் அளவில் விண்ணைப் பிளந்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset