செய்திகள் தமிழ் தொடர்புகள்
இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் உடல் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானியிடம் ஒப்படைப்பு
ராமேசுவரம்:
இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் இன்று சனிக்கிழமை ராமேசுவரத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூலை 31-ம் தேதி கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகிலிருந்து மூழ்கி மீனவர் மலைச்சாமி (59) உயிரிழந்தார். மீனவர் ராமச்சந்திரன் (64) கடலில் மாயமானார். முத்து முனியாண்டி(57), மூக்கையா(54) ஆகிய 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை வழக்கு எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதனையடுத்து உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்கள் மற்றும் மலைச்சாமி உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைத்தனர்.
அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக்கொண்ட இந்திய கடற்படை வீரர்கள் ராமேசுவரம் மீன் பிடித் துறைமுகத்திற்கு எடுத்து வந்து சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானியிடம் ஒப்படைத்தனர்.
அதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ராமேசுவரம் வட்டாட்சியர் செல்லப்பா மலைச்சாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல் இலங்கைக் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட 2 மீனவர்களும் விசாரணைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 21, 2026, 9:04 pm
"என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்”: இபிஎஸ்
January 19, 2026, 10:13 pm
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
January 18, 2026, 11:12 pm
நாளை சிபிஐ அலுவலகத்தில் 2ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்
January 16, 2026, 4:24 pm
திருவள்ளுவர் நாள் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2026, 10:35 pm
தமிழகத்தில் இன்றிரவும் நாளையும் மழைக்கான வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
January 15, 2026, 8:21 am
