நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

டத்தோஶ்ரீ சரவணன் இலங்கை மட்டகளப்பில்  திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்

கொழும்பு:

கிழக்கு மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடந்த உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு இலங்கை மட்டளப்பில் நடந்து வருகின்றது. இந்த மாநாட்டில் சிறப்பு பிரமுகராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கலந்து கொண்டார்.

சுமார் 13 நாடுகளிலிருந்து 500க்கும் அதிகமான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

இன்று காலை இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நடந்தது.

இதில் மட்டகளப்பு மத்திய பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலையை டத்தோஶ்ரீ சரவணனும்  மேதகு ஆளுநர் செந்தில் தொண்டமானும் திறந்து வைத்தனர்.

அதோடு மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய டத்தோஶ்ரீ சரவணன், இம்மாநாட்டின் சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார்.

2 நாட்கள் நடைபெறுகின்ற இந்த மாபெரும் மாநாட்டில் வரலாற்றில் இடம் பிடிக்குமென டத்தோஶ்ரீ சரவணன் புகழாரம் சூட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset