நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தந்தையை இழந்த சோகத்தை மீண்டும் உணர்கிறேன்: வயநாட்டில் ராகுல்

வயநாடு:

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட  நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ராகுல், தனது தந்தையை இழந்தபோது ஏற்பட்ட சோகத்தை மீண்டும் உணர்கிறேன் என்று உணர்ச்சி தழுவ கூறினார்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐதாண்டியுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டனர். நிவாரண முகாம்களில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேப்பாடியில் 2 நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நிச்சயமாக இது ஒரு தேசிய பேரழிவு. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளையும் இழந்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அவர்களிடம் பேசுவதே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனது தந்தையை இழந்தபோது ஏற்பட்ட சோகத்தை மீண்டும் உணர்கிறேன் என்றார்.

பிரியங்கா காந்தி கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், எங்களால் முடிந்த ஆதரவையும், ஆறுதலையும் வழங்குவோம் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset