நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இலங்கையில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு: டத்தோஸ்ரீ சரவணன் சிறப்புரை

மட்டக்களப்பு:

உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு அடுத்த இரண்டு நாட்களுக்கு இலங்கை மட்டக்களப்பில் விமரிசையாக நடைபெறவுள்ளது.

மஇகா  தேசியத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இம் மாநாட்டில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இலங்கை கிழக்கு மாகாண பண்பாட்டலூவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இம் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

திருவள்ளுவர் சிலை திறப்பு, உலகத் தமிழ் ஆய்வறிஞர்கள் பங்கு கொள்ளும் மாநாடு, தமிழ் கலைஞர்களின் ஊர்வலம், ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் என இம்மாநாடு சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

உலக நாடுகளில் இருந்து திரளான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.

டத்தோஸ்ரீ சரவணன் இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இலங்கை புறப்பட்டு சென்றார்.

இம் மாநாட்டில் அவர் முக்கிய பிரமுகராக கலந்து கொள்வதுடன் சிறப்புரையும் ஆற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset