நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: மோசமான கிருமிகள் இருப்பதாக கூறப்பட்ட சைன் ஆற்றில் நீந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு வாந்தி

பாரிஸ்:

மோசமான கிருமிகள் இருப்பதாக கூறப்பட்ட சைன் ஆற்றில் நீந்திய ஒலிம்பிக் வீரர்கள் வாந்தி எடுத்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சைன் ஆற்றில் நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் வாந்தி எடுக்கும் நிலை ஏற்பட்டது.

சைன் ஆற்றில் நீந்துவதற்கு தகுதியானது அல்ல என்பதால்தான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ஆற்றில் நீந்த தடை விதிக்கப்படுள்ளது.

ஆனால், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக அவசர அவசரமாக நதியை சுத்தம் செய்தது பிரான்ஸ் அரசாங்கம்.

ஆனால், 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த நதியை எப்படி சுத்தம் செய்வது?

ஆக, சுத்தம் செய்ததாக கூறினாலும், நதி நீர் அருவருப்பாகத்தான் இருந்தது என்கிறார் ட்ரையத்லான் போட்டிகளுக்காக அந் நதியில் நீந்திய பெல்ஜியம் நாட்டு வீராங்கனையான ஜோலின் வெர்மாய்லன். 

குறிப்பாக, பாலத்துக்கு அடியில் நீந்தும்போது நான் கண்ட அருவருப்பான காட்சிகளை மீண்டும் நினைத்துப்பார்க்கக்கூட முடியாது அந்த அளவுக்கு மோசமாக இருந்தது என்கிறார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset