
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று கிடைக்கும்
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் எழுதி இருந்தனர்.
தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் கடந்த மே மாதம் 6-ஆம் தேதி வெளியானது. இதில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் வெற்றி பெற்றனர். அதாவது, 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும், மதிப்பெண் பட்டியலையும் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், விவரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2025, 9:25 am
மாநிலங்களவை தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை: கமல்ஹாசன் உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றி தேர்வு
June 10, 2025, 11:33 am
'தூர கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
June 9, 2025, 4:19 pm
தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலர் பதவி
June 9, 2025, 8:43 am
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
June 8, 2025, 1:16 pm
மலேசியா சுற்றுலாப் பயணி கன்னத்தில் அறைந்த வனத்துறை அதிகாரி: கொடைக்கானலில் பரபரப்பு
June 8, 2025, 12:24 pm