நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில்வேகமாறுபாடு நிலவுகிறது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில்ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. 

29-ஆம் தேதி ஓரிரு இடங்களிலும், ஜூலை 30முதல் ஆக.2-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசிலஇடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset