நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கடந்த சீசனில் மென்செஸ்டர் யுனைடெட்டின் மோசமான அடைவு நிலைக்கு காயமே காரணம்: எரிக் தென் ஹாக்

லண்டன்:

கடந்த சீசனில் மென்செஸ்டர் யுனைடெட்டின் மோசமான அடைவு நிலைக்கு ஆட்டக்காரர்களின் காயமே காரணம்.

அதன் தலைமை நிர்வாகி எரிக் தென் ஹாக் இதனை கூறினார்.

கடந்த இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் பெரும் பின்னடைவை சந்தித்தனர்.

குறிப்பாக புள்ளிப் பட்டியலில் மென்செஸ்டர் யுனைடெட் 8ஆவது இடத்தை கைப்பற்றியது.

இதற்கு ஆட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட காயம் தான் முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால் வரும் சீசனில் மென்செஸ்டர் யுனைடெட் அணி நிச்சயம் மீண்டெழந்து வெற்றிகளை குவிக்கும்.

இதன் அடிப்படையில் தான் அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக எரிக் தென் ஹாக் வரும் 2026 வரை மென்செஸ்டர் யுனைடெட் அணியை வழிநடத்தி செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset