
செய்திகள் இந்தியா
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி
லக்னோ:
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதனால் அந்த மாநில பாஜகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளில் பாஜகவுக்கு 33 இடங்களே கிடைத்தன. இது அக்கட்சியை வழிநடத்தும் யோகி ஆதித்யநாத்தின் தோல்வியாக கருதப்படுகிறது.
அந்த மாநிலத்தில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர்.
இது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை அதிகரித்துள்ளது.
மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் யோகி ஆதித்யநாத், தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பேசிய மௌரியா, அரசைவிட கட்சியே எப்போதும் பெரியது. அதன் பிறகே துணை முதல்வர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்சியினரை மதிக்க வேண்டும். கட்சியினர் யார் வேண்டுமானாலும் என்னை அணுகி கருத்து தெரிவிக்கலாம் என்றார்.
அதேநேரம், "அதீத நம்பிக்கையே பாஜகவின் பின்னடைவுக்கு காரணமாகிவிட்டது' என்று ஆதித்யநாத் அந்தக் கூட்டத்தில் கூறினார்.
இந்தச் சூழலில், பிரதமர் மோடியை மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுதரி சந்தித்துப் பேசினார். அப்போது கட்சி ரீதியிலான பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் கூறினார்.
உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட 10 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 1:47 pm
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm